சமயநல்லூரில் பழமை வாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயம் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற இந்த தேவாலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக் கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூசை நடத்தியனார். பின்னர், விழா கொடியினை ஏற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று முதல் நாள்தோறும் பல்வேறு வகையான சிறப்பு திருப்பலிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆலயப் பங்குத் தந்தைகள் நடத்திவைக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சூசையப்பரின் பெருவிழா ஆடம்பரத் திருப்பலி, தேர்ப்பவனியும் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொடியேற்ற விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.