ETV Bharat / state

அங்கொடா லொக்கா விவகாரம் குறி்த்து சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் விளக்கம்!

author img

By

Published : Aug 7, 2020, 4:32 PM IST

மதுரை: அங்கொடா லொக்கா மதுரையில் உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் விளக்கமளித்துள்ளார்.

சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் செய்தியாளர்ச் சந்திப்பு

இலங்கையைச் சேர்ந்த நிழலுலக தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விசாரணையில் அங்கொடா லொக்கா மதுரையில் தங்கியிருந்த பல்வேறு வீடுகள், தொடர்புள்ள இடங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் நேற்று (ஆக. 6) மதுரை கூடல் நகர் அருகே உள்ள ரயிலார் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் விசாரித்துவருகின்றனர். அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத்குமார், சிபிசிஐடி விசாரணை இன்று (ஆகஸ்ட் 7) ஆஜராகினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வினோத்குமார், “2006ஆம் ஆண்டு எனக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்தேன். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். பிரிந்ததற்கான காரணங்களில் குடும்பத்தாருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை. அது குறித்து பலமுறை தெரிவித்தும் விடவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வழக்கறிஞர் சிவகாம சுந்தரியின் பெற்றோர் பாண்டியம்மாள், தினகரன் சிபிசிஐடி விசாரணைக்காக மதுரை சொக்கிகுளம் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகினர்.

இதையும் படிங்க...அங்கொடா லொக்கா விவகாரம்: மதுரையில் சிவகாமி வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடியினர் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.