ETV Bharat / state

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு மதுரையில் தொடக்கம் - மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி தொடங்கப்பட்டுள்ளது.

transgender
transgender
author img

By

Published : Jul 13, 2021, 10:26 AM IST

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கை மற்றும் திருநம்பி) பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, அரசு ராஜாஜி மருத்துவமனையின், புறநோயாளிகள் பிரிவு, அறை எண் 4ல் வருடத்தின் அனைத்து வியாழக்கிழமைகளில் காலை 10 முதல் 12 மணி வரை இயங்குகிறது.

இந்த பன்னோக்கு மருத்துவ சிகிச்சைப் பிரிவில் உளவியல் ஆலோசனை, ஹார்மோன்கள் சிகிச்சை, பாலின மாற்றுதல் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

திருநங்கையாக (Trans Female) மாற விரும்புபவர்களுக்கு ஆண்குறி மற்றும் விதை நீக்கம் (Penectomy and Gonadectomy), செயற்கை மார்பகம் பொருத்துதல் (Breast implant), திருநம்பியாக (Trans male), மாற விரும்புபவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் (Hysterectomy) மற்றும் மார்பகங்கள் நீக்குதல் (Mastectomy) போன்ற அறுவைச் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

பாலின மாற்று அறுவைச் சிகிச்சையானது நிரந்தரமானது மற்றும் மாற்றத்தக்க அல்ல.

ஒன்றிய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி 18 வயது நிரம்பிய பாலின மாற்ற அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள், உளவியல் மருத்துவ ஆலோசனையைக் குறைந்தது மூன்று மாதங்களும், ஹார்மோன் மருத்துவச் சிகிச்சையை ஆறு மாதங்களும், வெளித்தோற்றத்தில் மற்றும் உடையில் திருநங்கை மற்றும் திருநம்பியாக ஒரு வருடம் கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பில் வாழ வேண்டும்.

மூன்றாம் பாலின அடையாள அட்டைப்பெறுவதற்கான மருத்துவப்பரிசோதனைகளும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

மருத்துவப் பரிசோதனைக்குப்பின் சமூக நலத்துறையை அணுகி நிரந்தர அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

145 திருநங்கைகள், திருநம்பிகள் இதுவரை மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த மருத்துவப் பிரிவு உளவியல் மருத்துவர், அகச்சுரப்பியல் மருத்துவர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவர், மகளிர் நல மருத்துவ சிகிச்சை ஆகிய மருத்துவர்களைக் கொண்டு இயங்குகிறது.

மருத்துவ சிகிச்சைக்குழு மருத்துவக் கண்காணிப்பாளர் விஜயராகவன், அகச்சுரப்பியல் துறை தலைவர் ஸ்ரீதர், மனநலத்துறைத் தலைவர் குமணன், ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அறம், சிறுநீரக அறுவைச் சிகிச்சை தலைவர் மணிமாறன், மகளிர் நல துறைத் தலைவர் சுமதி, நிலைய மருத்துவ அலுவலர்கள் ரவீந்திரன் மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மருத்துவ சிகிச்சைக்குழு ஒருங்கிணைப்பாளர்:

Dr.S.ஸ்ரீதர் MD.,DM (Endo),

துறைத்தலைவர் அகச்சுரப்பியல் துறை

தொலைபேசி எண்:9789720246 .

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.