ETV Bharat / state

இராமநாதபுரம் - செகந்தராபாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் - ramanathapuram sirappu rayil

செகந்தராபாத் - இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

இராமநாதபுரம் - செகந்தராபாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

author img

By

Published : Jan 4, 2023, 6:40 AM IST

Updated : Jan 4, 2023, 10:27 AM IST

மதுரை: செகந்தராபாத் - இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி செகந்தராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) ஜனவரி 4 முதல் ஜனவரி 25 வரை புதன்கிழமைகளில் இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) ஜனவரி 6 முதல் ஜனவரி 27 வரை வெள்ளிக்கிழமைகளில் இராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்தராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

இதையும் படிங்க: விபத்தை தவிர்த்த சமயநல்லூர் இளைஞர் - ரூ.5ஆயிரம் பரிசு கொடுத்து உற்சாகப்படுத்திய ரயில்வே

Last Updated : Jan 4, 2023, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.