ETV Bharat / state

துபாய் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம் - தமிழ்நாடு மாணவர்கள் சாதனை

மதுரை: துபாயில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 72 தங்கம், 99 வெள்ளி, 96 வெண்கலம் வென்று இந்தியா முதலிடத்தை பெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று தங்கம், 17 வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்

தமிழநாடு மாணவர்கள் சாதணை
author img

By

Published : Apr 10, 2019, 11:42 AM IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டிற்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2500 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் 24 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன

இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கு இந்தியாவிலிருந்து மொத்தம் 292 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 13 போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 19 பேர் கலந்துகொண்டனர்.

தமிழநாடு மாணவர்கள் சாதணை

இவர்களில் மதுரை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 8 பேர் கலந்துகொண்டனர். குறிப்பாக மதுரை சிக்கந்தர் சாவடியில் அமைந்துள்ள ’பெத்சான்’ சிறப்பு பள்ளியில் இருந்து 6 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒரே பள்ளியில் இருந்து சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பு ஒலிம்பிக்கில் 72 தங்கம், 99 வெள்ளி, மற்றும் 96 வெண்கல பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட வீரர்கள் தடகளம், நீச்சல் போட்டி, இறகுப்பந்து, ரோலர் ஸ்கேட்டிங், கூடைப்பந்து, பளு தூக்குதல், மற்றும் கால்பந்து போன்ற போட்டிகளில் முறையே மூன்று தங்கம் 17 வெள்ளி ஆறு வெண்கலப்பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களை வென்றுள்ளனர்.

பெத்சான் பள்ளியிலிருந்து கலந்துகொண்ட திவ்யபாரதி இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், அதே போட்டியில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற மனோஜ் குமார் வெள்ளிப் பதக்கமும், ஜெயஸ்ரீ 500 மீட்டர் சைக்கிள் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், இரண்டு கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

அதேபோல், ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் தினேஷ் வெண்கலப்பதக்கமும், 100 மீட்டர் தடகளப் போட்டியில் சந்தியா தேவி வெண்கல பதக்கமும் வென்றனர்.

மேலும், ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் சித்தார்த்தன் 4-ஆம் இடம் பெற்று சாதனை படைத்தார்..

இதுகுறித்து பெத்சான் பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், ”சிறப்பு ஒலிம்பிக்கில் இதுபோன்ற சாதனைகள் படைப்பது மிகவும் கடினம். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக எங்களது மாணவ-மாணவிகள் மிகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் பிற சாதாரண ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்கு கிடைக்கின்ற சலுகையும் கௌரவமும் சிறப்பு ஒலிம்பிக் வீரர்கள் வீராங்கனைகளுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் மிக வருத்தமாக உள்ளது. அவர்களுக்கான ஊக்கமும், ஆதரவும் அளித்தால் எண்ணற்ற பல சாதனைகளை சிறப்புப் பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக நிகழ்த்துவார்கள். மத்திய, மாநில அரசாங்கங்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்

.

Intro:துபாயில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்கள் கொடுத்து மதுரை மாணவர்கள் சாதனை

Body:நான்காண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த ஆண்டிற்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன

இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2500 அறிவுத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் இதில் 24 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து மொத்தம் 292 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 13 விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 19 பேரும் உடல் ஊனமற்ற இரண்டு விளையாட்டு வீரர்கள் யுனிஃபைடு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர்

இவர்களில் மதுரை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 8 பேர் கலந்து கொண்டனர் அதில் மதுரை சிக்கந்தர் சாவடி அமைந்துள்ள பெத்சான் சிறப்பு பள்ளியில் இருந்து 6 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் ஒரே பள்ளியில் இருந்து சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய நாட்டின் சார்பாக கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகள் 72 தங்கம் 99 வெள்ளி மற்றும் 96 வெண்கல பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர் இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் தடகளம் நீச்சல் போட்டி இறகுப்பந்து ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து பளு தூக்குதல் மற்றும் கால்பந்து கூடைப்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு முறையே மூன்று தங்கம் 17 வெள்ளி ஆறு வெண்கலப்பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களை வென்றுள்ளனர்

மதுரை மாவட்டத்திலிருந்து பெத்சான் பள்ளி சார்பாக கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகளில் திவ்யபாரதி இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும் அதே போட்டியில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற மனோஜ் குமார் வெள்ளிப்பதக்கமும் ஜெயஸ்ரீ 500 மீட்டர் சைக்கிள் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் இரண்டு கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் தினேஷ் வெண்கலப்பதக்கமும் 100 மீட்டர் தடகளப் போட்டியில் சந்தியா தேவி வெண்கல பதக்கமும் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் போட்டியில் சித்தார்த்தன் 4-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்

இதுகுறித்து பெத்சான் பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் கூறுகையில் சிறப்பு ஒலிம்பிக்கில் இது போன்ற சாதனைகள் படைப்பது மிகவும் கடினம் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக எங்களது மாணவ மாணவிகள் மிக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டனர் அந்த பயிற்சி வீண் போகவில்லை ஆனால் பிற சாதாரண ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்கு கிடைக்கின்ற சலுகையும் கௌரவமும் சிறப்பு ஒலிம்பிக் வீரர்கள் வீராங்கனைகளுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் மிக வருத்தமாக உள்ளது அவர்களுக்கான ஊக்கமும் ஆதரவும் எண்ணற்ற பல சாதனைகளை சிறப்பு பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக படைப்பார்கள் மத்திய மாநில அரசாங்கங்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.