மதுரை: இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு பகுதியாக நாகர்கோவில் முதல் இரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 22, 26, 29 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை முதல் புனலூர் விரைவு ரயில் மற்றும் செப்டம்பர் 20, 23, 27, 30 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் முதல் மதுரை விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பணிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது நடைபெறவில்லை என்பதால் செப்டம்பர் 19 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை முதல் புனலூர் எக்ஸ்பிரஸ் மற்றும் செப்டம்பர் 20 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் முதல் மதுரை எக்ஸ்பிரஸ் ஆகியவை மட்டும் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:Viral Video - நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் மீது வழக்குப்பதிவு