மதுரை: தொடர் விடுமுறையை அடுத்து பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 9-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் ஏப்ரல் 10-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் கடையநல்லூர், பாம்பன் கோவில், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சந்திப்பிற்கு மாலை 5.35 மணிக்கு வந்தடையும். பிறகு அங்கிருந்து 5.40க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியாகச் சென்னை சென்றடையும்.
இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட 2 அடுக்கு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் இரண்டும், மூன்றடுக்கு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் ஐந்தும், படுக்கை வசதி மட்டும் கொண்ட 5 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட 3 பெட்டிகளோடு சரக்குப் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் வருவதையொட்டி இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் கின்னஸ் சாதனை செய்து அசத்தல்!