ETV Bharat / state

ரத்த தானத்தை வலியுறுத்தி 21 ஆயிரம் கிமீ நடக்கும் சமூக சேவகர்!

author img

By

Published : Feb 17, 2022, 9:38 PM IST

Updated : Feb 17, 2022, 10:53 PM IST

2025ஆம் ஆண்டுக்குப் பிறகு ரத்தம் கிடைக்காமல் இந்தியாவில் ஒருவர்கூட மரணம் அடையக் கூடாது என்பதை முன்னிறுத்தி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 21 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் கிரண் வர்மா.

சமூக சேவகர்
சமூக சேவகர்

மதுரை: கரோனா பெருந்தொற்று காலத்தில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் இந்தியா முழுவதும் பலர் மரணமடைய நேர்ந்தது. ஆகையால் வருகின்ற 2025ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ரத்தம் கிடைக்காமல் ஒருவர்கூட மரணமடையும் நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியைச் சமூக சேவகர் கிரண் வர்மா திருவனந்தபுரத்திலிருந்து 21 ஆயிரம் கிலோமீட்டர் என்ற தனது இலக்கை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கினார்.

21 ஆயிரம் கிலோமீட்டரை நிறைவுசெய்யும்போது, உலகிலேயே தனிநபர் ஒருவரின் மிக நீண்ட விழிப்புணர்வுப் பரப்புரையாக கிரண் வர்மாவின் இந்தச் சாதனை வரலாற்றில் பொறிக்கப்படும். கேரளா, கர்நாடகா வழியாக நேற்று சற்றேறக்குறைய ஆயிரம் கிலோமீட்டர் கடந்து மதுரை வந்தடைந்த கிரண் வர்மாவை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காகச் சந்தித்தோம்.

மிகுந்த ஆர்வத்துடன் உரையாடும் மக்கள்

அப்போது பேசிய கிரண் வர்மா, "அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் நான் பயணிக்கப் போகிறேன். வருகின்ற 2025ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ரத்தம் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு மரணம்கூட நிகழக் கூடாது என்பதுதான் எனது இந்த நடைபயணத்தின் நோக்கம்.

ரத்த தானத்தை வலியுறுத்தி 21 ஆயிரம் கிமீ நடக்கும் சமூக சேவகர்

நான் பயணிக்கும் வழியில் எங்கெங்கெல்லாம் மக்கள் கூட்டமாக இருக்கிறார்களோ அவர்களிடம் ரத்த தானத்தின் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசுகிறேன். மிகுந்த ஆர்வத்துடன் அவர்களும் என்னோடு உரையாடுகிறார்கள், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

இதுவரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாஹே, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, சிக்மங்களூரு, பெங்களூரு, ராமநகரா, மாண்டியா, மைசூரு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து நேற்று (பிப்ரவரி 16) மதுரை வந்தடைந்தார்.

மதுரை மக்களின் பழக்கவழக்கங்கள் பண்பாடு ஆகியவை மிகவும் பிடித்திருக்கிறது. கோயில்களின் நகரம் மதுரை என்று கூறி மகிழ்ந்தார்.

'சிம்ப்ளி பிளட்' அமைப்பு உருவாக காரணம்

அவர் மேலும் கூறுகையில், "அதிகரித்துவரும் கரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் தன்னார்வ ரத்த தானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது.

ரத்த வங்கிகள், மருத்துவமனைகள் ரத்தம் கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலையை மாற்ற, இந்தக் கடினமான நேரத்திலும் மக்களை வெளியே சென்று ரத்த தானம் செய்ய ஊக்குவிக்க இந்த நடைபயணம் பொதுமக்களுக்கு ஊக்கமாக அமையும்.

உடல்நலம் குன்றிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண் ஒருவருக்கு நான் ரத்தம் கொடுத்தேன். மருத்துவக் கட்டணத்திற்காக அந்தப் பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை அறிந்து மனம் நொந்துபோனேன்.

அதன்பின் நான் மேற்கொண்டுவந்த பணியை உதறித் தள்ளிவிட்டு 2017ஆம் ஆண்டு 'சிம்ப்ளி பிளட்' (Simply Blood) என்ற அமைப்பைத் தொடங்கி ரத்த தானம் குறித்த சமூக சேவையை மேற்கொண்டுவருகிறேன். ஒவ்வொரு நாளும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ரத்த தேவைக்காக நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கரோனா 2ஆவது அலையின்போது போதுமான பிளாஸ்மா கிடைக்காமல் மருத்துவமனைகள் கடும் அவதிக்குள்ளாகின. இந்தியா முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் கடும் ரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆண்டுதோறும் 15 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை

ரத்த தான விழிப்புணர்வை மையப்படுத்தி நான் உருவாக்கிய அமைப்பின் மூலம் 2018ஆம் ஆண்டு 16,000 கிலோ மீட்டர் பயணம் செய்தேன். சிம்ப்ளி பிளட் என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக ரத்தம் தேவைப்படுவோரையும் ரத்த தானம் செய்வோரையும் ஒரே குடையின்கீழ் இணைத்து மிகப்பெரிய சமூக சேவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு உலகிலேயே ரத்த தானம் தொடர்பான மிகப்பெரிய மெய்நிகர் வலைதளம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 15 மில்லியன் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் இதில் 10 லிருந்து 11 மில்லியன் யூனிட் ரத்தம் மட்டுமே இந்தியாவின் தேவையைப் பூர்த்திசெய்கிறது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக இந்திய இளைஞர்களைச் சந்தித்து அவர்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்திவருகிறேன். இதுவே எனது நோக்கம். 2025ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை கண்டிப்பாக நான் எட்ட வேண்டும் என உறுதிபூண்டுள்ளேன். 2025 டிசம்பர் 31-க்குப் பிறகு ரத்தம் கிடைக்காமல் ஒருவர்கூட மரணம் அடையக் கூடாது.

தென்னிந்திய மக்களுக்கு நல்ல கல்வியறிவு உள்ளது

நான் பயணம் மேற்கொண்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 16 ரத்த தான முகாம்கள் நடத்தியுள்ளேன். இவற்றின் மூலம் 700 பேர் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ரத்த தானம் குறித்து முழு விழிப்புணர்வு கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் இங்கு நல்ல கல்வியறிவு உள்ளது. இதே போன்ற நிலை வட இந்திய மாநிலங்களிலும் உருவாக வேண்டும்" என்றார்.

மத்திய, மாநில அரசுகள் அல்லது பிற அமைப்புகள் என யாருடைய உதவியும் இன்றி தன்னுடைய நண்பர்களின் துணையோடு கிரண் வர்மா மேற்கொண்டுவரும் இந்த விழிப்புணர்வு நடைபயணம், இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் ரத்த தானம் குறித்த புரிதல் உணர்வு ஏற்பட வேண்டும் என்பதேயாகும்.

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் வீட்டில் சோதனை

Last Updated : Feb 17, 2022, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.