மதுரையைச் சேர்ந்த தென்னரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
மேலும் கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதே கோரிக்கைக்காக பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று
(ஆகஸ்ட் 17) நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் மூன்று பேர் குழு அமைத்து, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு - பீர் பாட்டில் அனுப்பும் பணி தீவிரம்!