தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சத்திய தாஸ் பாபு என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில், இன்று காலை, புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த குப்பை ஏற்றி செல்லும் நகராட்சி லாரி ஒன்று நின்றுள்ளது.
இந்நிலையில், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி லாரி மீது மோதி நிலைகுலைந்து அந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இதனிடையே, சாலையின் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்து, கார் உரசிச்செல்லவே இருசக்கர வாகனத்தின் கண்ணாடி உடைந்து இளைஞரின் கழுத்தை அறுத்துள்ளது.
அதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.