மதுரை: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் புதிய ரயில்வே மேலாளராக சரத் ஸ்ரீவஸ்தவா இன்று (அக்.09) பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பதவி ஆணைக்காக காத்திருக்கும் தற்போதைய கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், புதிய மேலாளர் சரத் ஸ்ரீவத்சவாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
-
Shri Sharad Srivastava, an IRTS graduate with two decades of railway experience, takes the helm as DRM of Madurai Division on 09.10.2023. @GMSRailway @RailMinIndia #drmmadurai #DRMMDU pic.twitter.com/Ef8hnsAmHx
— DRM MADURAI (@drmmadurai) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Sharad Srivastava, an IRTS graduate with two decades of railway experience, takes the helm as DRM of Madurai Division on 09.10.2023. @GMSRailway @RailMinIndia #drmmadurai #DRMMDU pic.twitter.com/Ef8hnsAmHx
— DRM MADURAI (@drmmadurai) October 9, 2023Shri Sharad Srivastava, an IRTS graduate with two decades of railway experience, takes the helm as DRM of Madurai Division on 09.10.2023. @GMSRailway @RailMinIndia #drmmadurai #DRMMDU pic.twitter.com/Ef8hnsAmHx
— DRM MADURAI (@drmmadurai) October 9, 2023
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் புதிய ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை சட்டக்கல்வி பயின்றுள்ளார். இவர் இந்திய ரயில்வே போக்குவரத்து பணி 1996ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.
மதுரைக்கு கோட்ட மேலாளராக வருவதற்கு முன்பு, புதுடெல்லி ரயில்வே வாரியத்தில் பொது போக்குவரத்து வர்த்தக பிரிவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் வடக்கு ரயில்வேயில் மொரதாபாத் (Moradabad) கோட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகவும், மத்திய ரயில்வே இணை அமைச்சரின் கீழ் இயங்கி வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பூர் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!