ETV Bharat / state

முகிலனின் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை - தூத்துக்குடி ஸ்டெர்லைட்

மதுரை: முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முகிலனின் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை
முகிலனின் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை
author img

By

Published : Jan 20, 2020, 8:09 PM IST

கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். காவிரி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் குவாரிக்கு எதிராக முகிலனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். முகிலன் பிப்ரவரி 15இல் திடீரென காணாமல்போனார். ஜூலை 6ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். முகிலன் தலைமறைவாக இருந்தபோது குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் முகிலன் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக முகிலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலன் சென்னை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அவரை பாலியல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்தேன். அதன்பிறகு வழக்கில் என்னை இரண்டாவது எதிரியாக சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

தற்போது முகிலனும், நானும் பாலியல் வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளோம். இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டேன். இருப்பினும் தேவையில்லாமல் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே கரூர் 2ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “விசாரணையின்போது மனுதாரரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதனால் காவல் துறையினர் வேண்டுமென்றே பழி சுமத்தியுள்ளது தெரியவருகிறது" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Intro:முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Body:முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். காவிரி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் குவாரிக்கு எதிராக முகிலனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். முகிலன் பிப்ரவரி 15-ல் திடீரென காணாமல்போனார். ஜூலை 6-ல் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முகிலன் தலைமறைவாக இருந்த போது குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் முகிலன் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக முகிலன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலன் சென்னை சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அவரை பாலியல் வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்தேன். அதன் பிறகு வழக்கில் என்னை இரண்டாவது எதிரியாக சேர்த்து போலீஸார் கைது செய்தனர்.
தற்போது முகிலனும், நானும் பாலியல் வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளோம். இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டேன். இருப்பினும் தேவையில்லாமல் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே கரூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," விசாரணையின் போது மனுதாரரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதனால் காவல் துறையினர் வேண்டுமென்ற பழி சுமத்தியுள்ளது தெரியவருகிறது" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.