மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காளைகளும், மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கி விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். வெற்றி பெறும் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி மற்றும் சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 4ஆவது சுற்றின்போது பாலமேட்டைச் சேர்ந்த காளி என்பவரின் மாடு வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு கிரைண்டர் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக காளியின் தலையில் கிரைண்டர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, சம்பவ இடத்தில் இருந்த முதலுதவி குழுவினர் காளியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 15 பேர் காயமடைந்துள்ளனர்.