மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "உரிய நேரத்தில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால்தான் விவசாயி தற்கொலை நடந்துள்ளது. மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரவில்லை.
வலிமை மிக்க இந்திய அரசு ஏன் நமது மீனவர்களை பாதுகாக்கவில்லை, நம் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே தவறாக உள்ளது. நட்பு நாடு என கூறிக்கொண்டு நமது மீனவர்களை கொன்று குவிக்கும் அவர்களுக்கே ஆயுதம், பயிற்சிகளை வழங்கிவருகிறது.
நீர் இலவசம் என்ற கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையான நிர்வாகம் என்பதே எங்கள் நிலைப்பாடு.
தமிழ்நாட்டில், பாஜக தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய பட்ஜெட் என்பதே அல்வாதான். தமிழ்நாட்டிற்கு நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழேதான் பாஜக. சசிகலா உடல்நலத்துடன் இருந்து மீண்டுவர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்