ETV Bharat / state

'சதுரங்க வேட்டை' பட பாணியில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்தவர்கள் கைது! - 1 crore 26 lakhs

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.26 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

’சதுரங்க வேட்டை’ பட பாணியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 26 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது!!

author img

By

Published : Jul 2, 2022, 12:53 PM IST

மதுரை: செக்காணூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தைச்சேர்ந்த சேகர் என்பவர் சமையல் கான்டிராக்டர் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செக்காணூரணியைச்சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் சேகரை சந்தித்துப் பேசியபோது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரான பாண்டியராஜன் என்பவர் தனது நண்பர் ரஞ்சித்குமாருக்கு நன்கு பழக்கமானவர் எனக்கூறியதோடு; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைய காலிப்பணியிடங்கள் இருப்பதால், அவரின் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சேகர் தனது மகன் மற்றும் மகளுக்கு வேலை வாங்கித்தருமாறு கேட்டபோது, உதவியாளர் வேலைக்குத் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 8 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். இதனையடுத்து வேலை குறித்து கேட்டபோது சில மாதங்களில் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருவாய் துணை மற்றும் மதுரை மாநகராட்சி துணை அலுவலர் பணிக்கு வேலை மற்றும் பயிற்சிக்கு வருமாறு மதுரை மாவட்ட அலுவலகத்திலிருந்து வருவதுபோல் பணி ஆணை அனுப்பி வைத்துள்ளனர். சேகர் இது குறித்து முனீஸ்வரனிடம் கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சேகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான சுமார் 26 நபர்களிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு என ரூ.4 லட்சம் முதல் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என 17 நபர்களிடமும், அலுவலக ஆய்வாளர் பணிக்கு சுமார் 8 லட்சம் வீதம் 5 நபர்களிடமும், துப்புரவுப்பணியாளர் பணிக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 1கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கான பணி ஆணை கொடுக்காமல் முனீஸ்வரன் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில் 5 மாதம் கழித்து பணம் பெற்றிருந்த சேகரின் மகன், மகள் உட்பட 28 நபர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் கையெழுத்துடன் வேலைப்பணி ஆணை, அசல் நகலை பதிவு தபால் மூலம் ஆட்சியர் அலுவலகத்திருந்து வருவது போல் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 2021 நவம்பர் 23ஆம் தேதியன்று அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலை 08.00 மணி முதல் 08.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வருமாறு கூறி வர வைத்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி நபர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கேண்டீன் அருகே உட்கார வைத்து ஆட்சியரின் உதவியாளர் எனக்கூறிய பாண்டியராஜனும் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் நேர்காணல் நடத்தியுள்ளனர். அப்போது நேர்காணலுக்கு வந்த அனைவரிடமும் வழங்கப்பட்ட அசல் பணி ஆணைகளையும் மற்றும் அனைத்துப் படிப்பு சான்றிதழ்கள், PAN கார்டு, ஆதார் கார்டு, ஸ்மார்ட்கார்டு, காவல்துறை சரிபார்ப்புச் சான்றிதழ், மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆகிய அனைத்தையும் வாங்கி வைத்துள்ளனர்.

அம்பலமான மோசடி: இதனையடுத்து நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இன்னும் 5 நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பல நாட்கள் ஆகியும் வேலைக்கு அழைக்காத நிலையில் முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் வேலைக்கு சேர சொன்ன இடத்தில் விசாரித்தபோது, அப்படி ஒரு பணி ஆணை எதுவும் அவர்களுக்கு வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மூன்று பேரிடமும் பணம் கொடுத்தவர்கள் பணத்தைக்கேட்டபோது தான், அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் கையெழுத்துடன் போலியான பணி ஆணை தயார் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை திரும்பக்கேட்டபோது பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக பணத்தை இழந்த சேகர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட செக்காணூரணியைச் சேர்ந்த முனீஸ்வரன் மற்றும் வைகை வடகரைப்பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான ரஞ்சித்தை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ஆட்சியரின் பெயரில் பணி ஆணை வழங்கியதோடு, ஆட்சியர் அலுவலகத்திலயே நேர்காணல் நடத்திச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகம் அமைக்கக்கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம் - இதுதான் காரணமாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.