ETV Bharat / state

சாத்தான்குளம் காவல் ஆய்வாளரது பிணை மனு - சிபிஐ பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Sep 3, 2020, 12:18 PM IST

மதுரை : சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பிணைக் கோரிய வழக்கில், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

saththanankulam inspector bail pettition: madurai bench notice cbi

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.

எனக்கு பிணை வழங்கும்பட்சத்தில் நான் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றத்தின் உத்தர்வுகளுக்குக் கட்டுப்படுவேன் என உறுதியாகக் கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இவ்வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.