ETV Bharat / state

கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது! - 25 கிலோ கஞ்சா

மதுரை: 25 கிலோ கஞ்சா கடத்தியதற்காக பிரபல ரவுடி உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரவுடி கைது
ரவுடி கைது
author img

By

Published : Sep 21, 2020, 2:49 PM IST

மதுரை கரிமேடு பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கார் மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி மெயின் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனையிட்டபோது 25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்ற காளிமுத்து, பாலாஜி, முனீஸ்வரன் மற்றும் மாரீஸ்வரன் ஆகிய நான்கு பேரை கரிமேடு காவல் துறையினர் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காவல் துறையினருக்கு பயந்து வெள்ளைக்காளி தப்பியோட முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டதால் வெள்ளைக்காளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட மற்ற மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பெண் வெட்டிப் படுகொலை - இளைஞ‌ர் வெறிச் செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.