ETV Bharat / state

'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை! - தினமும் குரங்குகளுக்கு உணவு

மதுரை: குரங்குகளையும் குழந்தைகளாய்ப் பேணி பழங்கள், நிலக்கடலை மற்றும் முட்டைகள் வழங்கி உயிர்களின் மீதான தனது கருணையை நிரூபித்துக் காட்டுகிறார், மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதி. அது குறித்த ஒரு நெகிழ்ச்சிக் கதையைத் தற்போது காண்போம்.

ex dsp malathy
author img

By

Published : Oct 1, 2019, 7:29 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே ஆட்டோவில் வந்து இறங்கினார், ஓய்வுபெற்ற டிஎஸ்பி மாலதி. அவரைப் பார்த்ததும் சோர்ந்து கிடந்த குரங்குகள் உற்சாகமாய் ஆட்டோவைத் தேடி வந்தன. பசி மயக்கத்தில் கிடந்த குரங்குகள், தனது பெற்ற தாயைப் பார்த்ததுபோல மகிழ்ச்சியில் ஓடி வந்து அவரிடம் தஞ்சம் அடைந்துவிட்டன. இதில், ஒரு சில குரங்குகள் அத்துமீறி கூடைகளிலிருந்த பழங்களையும், கடலைகளையும், முட்டைகளையும் எடுத்துச் செல்கின்றன.

இதனைப் பார்த்த மாலதி மிகப் பரிவோடும், கோபப்படாமலும் தன் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் 'சரிடா... சரிடா... எல்லாம் உங்களுக்குத்தான்டா...' என்று அன்பொழுகப் பேசி மகிழ்கிறார். இந்தக் காட்சிகள் பார்ப்பவரை நெகிழ்ச்சியூட்டுகிறது. அங்கு சுற்றித் திரியும் குரங்குகளின் பசியைப் போக்கிய மன திருப்தியோடு, திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயிலுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவரை பின்தொடர்ந்தே ஈடிவி பாரத் தமிழ் ஊடகக்குழுவும் சென்றது.

பொறுமையா வாங்கி சாப்பிடு
'பொறுமையா வாங்கி சாப்பிடு'

கல்வெட்டு குகை கோயிலுக்குள் நுழைந்ததும், ஆட்டோவை விட்டு இறங்கி குரங்குகளை தான் பெற்ற பிள்ளைகளை அழைப்பதுபோல், அழகு தமிழில் 'வா...கண்ணா...வா' என்று அழைக்கிறார். அவர் அழைத்த மறுகணம் குரங்கு குட்டிகள் ஒவ்வொன்றும் மாலதி இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வருகின்றன. தன் கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை குரங்குகளிடம் பகிர்ந்தளித்தார், மாலதி. அதில் ஒரு குரங்கு மட்டும் அவரிடம் எனக்கு இன்னொன்று வேண்டும் என்ற தொனியில் கையை அசைக்கிறது. அவரிடம் இருக்கும் வாழைப்பழத்தை பறிக்கவும் முயல்கிறது. இதற்கும் சிறிதளவும் கோபப்படாத அந்த மாலதி அம்மா சிரித்தபடியே, 'இருடா தர்றேன். மற்றவங்களுக்கும் கொடுக்கணும்ல. உனக்கு வயிறு நிறைஞ்சா போதுமா?' என்று விளையாட்டாக கேட்கிறார்.

குரங்குகளை காக்க நோட்டீஸ் வழங்கும் காட்சி

அவர் பேசுவது புரிந்தாற்போல், அந்த குரங்கு அமைதியாக சாப்பிட்டது. பெற்ற பிள்ளைகளையே அவதூறாக அழைக்கும் இந்தக் காலத்தில் குரங்குகளை, பெற்ற பிள்ளைகளைப் போல் பாசமாய், பரிவுகாட்டி, அன்போடு பிள்ளைகள் என்று மாலதி அழைப்பது அவர் குரங்குகள் மீது வைத்திருக்கும் பாசம் அளப்பறியது என்பதை பிறருக்கு புரிய வைக்கிறது. குழந்தைகளைப் போல் அவர் குரங்குகளை நேசிக்கிறார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், '2010ஆம் ஆண்டு நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றேன். 2015ஆம் ஆண்டிலிருந்து குரங்குகளுக்கு பழங்கள் தருகின்ற சேவையில் இறங்கினேன். திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிறைய குரங்குகள் உள்ளன. 'குழந்தைகள்' என்றுதான் அவற்றை நான் சொல்வேன். இங்கு மரங்கள் அதிகம் இருக்கிறது. ஆனால், இங்கு சுற்றித் திரியும் பிள்ளைகளின் பசியைத் தணிக்கக்கூடிய அளவிலான பழ மரங்கள் எதுவும் இல்லை. அதனால் தான் அவை பசியோடு இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனது ஓய்வுக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளுக்கு நாள்தோறும் பழங்கள், வேர்க்கடலை, முட்டை என பாசத்தோடு வழங்கி வருகிறேன்.

அவசரப்படாம வாங்கிக்க
'அவசரப்படாம வாங்கிக்க'

ஆனால், என்ன... முன்ன மாதிரி தினமும் வந்து போக முடியலை. உடல் நிலையும் ஒத்துழைக்க மாட்டேங்குது. அதனால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதையெல்லாம் வழங்கி வருகிறேன். திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கை, குகைக்கோயில், மயில் தோப்பு, கோட்டைத் தெரு மற்றும் சஷ்டி மண்டபம் ஆகிய பகுதிகளில் குரங்குள் நிறைய உள்ளன. அங்கெல்லாம் தேடிச் சென்று உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன் என்றும் நெகிழ்ச்சியாக கூறினார்.

சற்று வாஞ்சையுடன் குரங்குகளைத் தடவி கொடுத்துவிட்டு தொடர்ந்த மாலதி, 'அதுமட்டுமில்லை ஒரு முக்கியமான சேவையா 'குரங்குகளும் நம் குழந்தைகள்தான்' என்ற தலைப்பில் அக்குரங்குகள் பேசுவதைப் போன்று துண்டறிக்கை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கியும் வருகிறேன். யாராவது உதவ முன்வந்தா நல்லா இருக்கும். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு சேவையாதான் செய்துட்டு வர்றேன். இங்குள்ள மயில்களைப் பராமரிக்க மத்திய அரசு மூலமாகவும் நிதி வருகிறது. அதேபோன்று கோயிலில் உள்ள யானைகளுக்கும் கோயில் நிர்வாகத்தின் மூலமாக உதவிகள் கிடைக்கின்றன.

ஆனால் இந்தக் குரங்களுக்கு அப்படியொரு ஏற்பாடு இல்லை. இதனை மாநில அரசு உணர்ந்து குரங்குகளைக் காப்பாற்ற நிதி ஒதுக்க வேண்டும்' என்றார்.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்த வீரத்தமிழர் முன்னணி அமைப்பின் நிர்வாகி முருகன் கூறுகையில், '2015இல் இருந்தே இவங்க குரங்குகளுக்கு உணவு வழங்கிட்டு வர்றாங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, செய்து வருகிறார். தனிநபராய் இவர் செய்யும் உதவியை, தன்னார்வ நிறுவனங்களும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டால் மிக நன்றாக இருக்கும். அனைத்து உயிர்களுக்குமான இந்தப் பூமியை இதுபோன்ற செயல்களால்தான் மீட்டெடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற முன்னாள் டிஎஸ்பி மாலதி அம்மாவின் சேவை மிகவும் உன்னதமானது. குரங்குகளை குழந்தைகளாய் மதிக்கும் பண்பு அளப்பரியது. இவரது காக்கிக்குள் இருக்கும் கருணைப் பண்பை வெளிக்காட்டுகிறது. அரசை நோக்கி அவர் முன் வைக்கும் கோரிக்கை தொடர்புள்ளவர்களின் செவிகளை எட்ட வேண்டும். ஈடிவி பாரத் தமிழ் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

இதையும் படிங்க:

#HBDSivajiGanesan - 'இன்பச் சக்கரம் சுற்றுதடா, அதில் நான் சக்கரவர்த்தியடா'!

Intro:குரங்குகளும் நம் குழந்தைகள்தான் - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணை மிகு சேவை

குரங்குகளையும் குழந்தைகளாய்ப் பேணி பழங்கள், நிலக்கடலை மற்றும் முட்டைகள் வழங்கி உயிர்களின் மீதான தனது கருணையை நிரூபித்துக் காட்டுகிறார் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதி. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
Body:குரங்குகளும் நம் குழந்தைகள்தான் - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணை மிகு சேவை

குரங்குகளையும் குழந்தைகளாய்ப் பேணி பழங்கள், நிலக்கடலை மற்றும் முட்டைகள் வழங்கி உயிர்களின் மீதான தனது கருணையை நிரூபித்துக் காட்டுகிறார் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதி. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே ஆட்டோவில் வந்திறங்குகிறார். வாழைப்பழம், வேர்க்கடலை, முட்டை ஆகியவற்றோடு வந்த அடுத்த கணமே அவரைப் பார்த்தவுடன் குரங்குகளெல்லாம் ஆர்ப்பரித்து ஓடி வருகின்றன.

மிகப் பரிவோடும், கருணையோடும் ஒவ்வொன்றாய் தருகிறார். சில குரங்குகள் அத்துமீறி ஆட்டோவுக்குள் ஏறி கூடைகளிலிருந்து பழங்களையும், கடலையையும், முட்டையையும் எடுத்துச் செல்கின்றன. 'சரிடா... சரிடா... எல்லாம் உங்களுக்குத்தான்டா...' என்று அன்பொழுகப் பேசி மகிழ்கிறார்.

பிறகு அங்கிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோவிலுக்குச் செல்கிறார். உள்ளே நுழைந்ததும், கீழே இறங்கி 'வா.... வா... வா...' என்று குரங்குகளை அழைக்கிறார். பாரபட்சமின்றி அனைத்துக் குரங்குகளுக்கும் தன் கையால் பழங்களைத் தருகிறார்.

அவரிடம் ஈடிவி பாரத் ஊடகத்திற்காகப் பேசியபோது, 'கடந்த 2010-ஆம் ஆண்டு நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றேன். அதற்குப் பிறகுதான் குரங்குகளுக்கு பழங்கள் தருகின்ற சேவையில் இறங்கினேன். திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிறைய குரங்குகள் உள்ளன. குழந்தைகள் என்றுதான் அவற்றை நான் சொல்வேன்.

இங்கு குரங்களின் பசியைத் தணிக்கக்கூடிய அளவிலான பழ மரங்கள் எதுவும் இல்லை. ஆகையால் அவை பசியோடு இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனது ஓய்வுக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளுக்கு நாள்தோறும் பழங்கள், வேர்க்கடலை, முட்டை என வழங்கத் தொடங்கினேன்.

பிறகு தொடர்ந்து வர இயலாத காரணத்தால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருவதை வழக்கமாக்கியுள்ளேன். திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கை, குகைக்கோவில், மயில் தோப்பு, கோட்டைத் தெரு மற்றும் சஷ்டி மண்டபம் ஆகிய பகுதிகளில் குரங்குள் நிறைய உள்ளன. அங்கெல்லாம் தேடிச் சென்று உணவு வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்' என்கிறார்.

கடந்த 2010-இல் பணி ஓய்வு பெற்றாலும், 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருவதாகக் கூறும் டிஎஸ்பி மாலதி, மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை ஏறக்குறைய 350 குரங்களுக்கு இந்த சேவையை ஆற்றி வருகிறார். மேலும் தான் செல்லுமிடங்களில் 'குரங்குகளும் நம் குழந்தைகள்தான்' என்ற தலைப்பில் அக்குரங்குகள் பேசுவதைப் போன்று துண்டறிக்கை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கியும் வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், 'நமது குழந்தைகளுக்கு நாம் செய்கின்ற பணியைப் போன்றே இதனை நான் கருதுகிறேன். இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது. திருப்பரங்குன்றத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் வருகின்றனர். மேலும் நாள்தோறும் இப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் உண்டு. குரங்குகளும் நம் குழந்தைகள்தான் என்று அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்கிறேன்.

இங்குள்ள மயில்களைப் பராமரிக்க மத்திய அரசு மூலமாகவும் நிதி வருகிறது. அதேபோன்று கோவிலில் உள்ள யானைகளுக்கும் கோவில் நிர்வாகத்தின் மூலமாக உதவிகள் கிடைக்கின்றன. ஆனால் இந்தக் குரங்களுக்கு அப்படியொரு ஏற்பாடு இல்லை. இதனை மாநில அரசு உணர்ந்து குரங்குகளைக் காப்பாற்ற நிதி ஒதுக்க வேண்டும்' என்கிறார்.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்த வீரத்தமிழர் முன்னணி அமைப்பின் நிர்வாகி முருகன் கூறுகையில், 'பல வருடங்களாகவே இந்த அம்மா குரங்குகளுக்கு தன்னலமின்றி சேவை புரிந்து வருகிறார். தனிநபராய் இவர் செய்கின்ற உதவியைப் போன்று தன்னார்வ நிறுவனங்களும், கோவில் நிர்வாகமும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உயிர்களுக்குமான இந்தப் பூமியை இதுபோன்ற செயல்களால்தான் மீட்டெடுக்க முடியும்' என்றார்.

எத்தனையோ சேவைகள் இருந்தாலும் உயிரினங்களும் வாழ்வதற்காக செய்கின்ற சேவை உன்னதமானது. எந்தவித நோக்கமுமின்றி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு குரங்குகளை குழந்தைகளாய் நினைத்து மாலதி ஆற்றும் பணி, காக்கிக்குள் இருக்கும் கருணைப் பண்பை வெளிக்காட்டுகிறது. அரசை நோக்கி அவர் முன் வைக்கும் கோரிக்கை தொடர்புள்ளவர்களின் செவிகளை எட்ட வேண்டும்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.