மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கீழத்தெருவில் உள்ள கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து 25க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்துகொள்ள கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அகற்ற கூறினர்.
எனினும் யாரும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினரின் பாதுகாப்புடன் தாசில்தார் பாண்டி தலைமையில், அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டிய வீடு, கடைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்டடங்களை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
நீர்பிடிப்பு பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம் - நாகமலை புதுக்கோட்டை நீர்பிடிப்பு பகுதிகள்
மதுரை: நாகமலை புதுக்கோட்டையில் நீர்பிடிப்பு கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.