மதுரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் 04, 11, 18 ஆகிய (வியாழக்கிழமை) தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 02, 09, 16 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 15) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக அழகியுடன் டேட்டிங்கில் இருக்கும் லலித் மோடி...