மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (65). இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக மதுரையில் மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.

1976ஆம் ஆண்டு மதுரையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். அன்று முதல் தற்போது வரை ரஜினியின் தீவிர ரசிகராக வாழ்ந்தவர். இவரது திருமணம் ரஜினியின் வீட்டில் நடைபெற்றது.
உடல்நிலை குன்றி இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இரவு (மார்ச் 08) உடல்நலக்குறைவின் காரணமாக மதுரை கோ.புதூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இதையும் படிங்க: AK61 - இந்தியன் மணி ஹெய்ஸ்ட் கதையா.. ?