தெற்கு ரயில்வே அளவில் ஆறு ரயில்வே கோட்டங்களுக்கு இடையே ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 29ஆவது கபடி போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் சென்னை திருச்சி, சேலம், மதுரை கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கரோனா தொற்று காரணமாக பாலக்காடு, திருவனந்தபுரம், கோட்டங்கள் கலந்து கொள்ளவில்லை.
இரண்டு நாள்களாக நான்கு அணிகள் விளையாடியதில் மதுரை கோட்டமும், திருச்சி கோட்டமும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. வெள்ளியன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 28 : 23 புள்ளிகள் கணக்கில் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் போராடி மதுரை கோட்டத்தை வென்று சுழற் கோப்பையை கைப்பற்றினர்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் வெற்றி பெற்ற திருச்சி அணியின் கேப்டன் கார்த்திக்கிற்கு சுழற் கோப்பையை வழங்கி பாராட்டினார். விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மனசு காணி, கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர் வி.ஜே.பி. அன்பரசு, அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குப்பையை சாலையில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலை மறியல்