ETV Bharat / state

'தற்காலிக வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ்' - ராதாகிருஷ்ணன் - எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமைனையை தற்காலிகமாக வாடகைக் கட்டடத்தில் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ்
எய்ம்ஸ்
author img

By

Published : Oct 16, 2021, 7:26 PM IST

மதுரை: மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (அக்.16) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகங்களில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெங்கு - முன்னெச்சரிக்கை

ரூ. 121.8 கோடி மதிப்பில் கட்டப்படும் 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அடங்கிய 7 மாடி கட்டடம் உள்ளிட்ட புதிய மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் முடிவடையும். அதற்கு ரூ.173 கோடி மதிப்பில் உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ. 112 கோடி செலவில் கட்டப்படும் கூடுதல் வளாகம், இந்த ஆண்டு இறுதியில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் டெங்குவால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 187 நபர்கள் டெங்குக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போது 351 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஆண்டு டெங்கு நோய் தடுப்பு பணிகளின்போது 29 ஆயிரத்து 875 மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 92 ஆயிரத்து 47 மாதிரிகள் எடுக்கப்பட்டன. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ஆலோசனைகளை, ஜப்பான் நிறுவனமான ஜைகா தொடங்கியுள்ளது.

எய்ம்ஸ் வாடகை கட்டடத்தில் இயங்க அனுமதி

கட்டுமான பணிகள் நிறைவடையும்வரை மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக எய்ம்ஸ் வாடகை கட்டடத்தில் இயங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்குரிய வாடகையை செலுத்தவும் தயார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தோப்பூர் மருத்துவமனையில் எய்ம்ஸின் தற்காலிக வெளி நோயாளிகள் பிரிவை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி அரசு முடிவெடுக்கும்.

அக்டோபர் 20ஆம் தேதி சென்னை வரவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரதிநிதிகள் குழுவுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கரோனா பாதிப்பு தொடர்பாக மரபியல் ரீதியாக நடத்தப்பட்ட முதல் 50 மாதிரி ஆய்வுகளில், 42 மாதிரி முடிவுகளில் அதிவேக டெல்டா வகை மாறுதல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் பாதித்து உயிரிழந்த 34 சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான படிவங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவுரைக்கு யெஸ், வற்புறுத்தலுக்கு நோ

மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர் ஒப்புதல் மட்டும் இருந்தாலே, அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பொதுமக்களிடம் நிபந்தனையாக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோரிடம், தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துகின்ற அளவிற்கு அறிவுரைகளை வழங்க வேண்டுமேத்தவிர, வற்புறுத்துதல் கூடாது என தலைமைச் செயலாளரே அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.

ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'ஆஷா பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.