மதுரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு தெருக்கள், பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருள்களைத் தங்களுக்கு அருகிலுள்ள கடைகளில்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேவையின்றி அடுத்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது. குறிப்பாக நடந்துதான் வரவேண்டும். இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான அபராதமும் கடுமையாக விதிக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு உள்ள அடையாள அட்டைகள் பெறப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ’கரோனாவில் மரணம் வரலாம்; ஆனால் மனித தன்மைக்கு?‘ - சு.வெங்கடேசன் எம்பி