ETV Bharat / state

'பாஜக ஆட்சியில் காந்தி இருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்' - காட்டமான நாராயணசாமி!

மதுரை: காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

cm narayanasamy
author img

By

Published : Oct 3, 2019, 5:21 PM IST

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பாஜகவினர் அனைவரும் ஆர்எஸ்எஸ் வழியில் செயல்படுகின்றனர் என்றும்; காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் காலத்தில் 9 சதவீதம் இருந்தது. தற்போது 4 சதவீதம் மட்டுமே உள்ளது. வரிக்குறைப்பு செய்தது பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஒரே நாடு ஒரே தேசம், ஒரே மொழி ஒரே கலாசாரம் என்ற மோடியின் குறிக்கோள் எடுபடாது என விமர்சித்தார்.

ஆர்எஸ்எஸ் வழியில் ஆட்சி செய்யும் பாஜக - நாராயணசாமி

மேலும் நாராயணசாமி, தமிழ் மொழி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி குறித்தும், கலாசாரம் குறித்து பெருமையாக பேசி வரும் நிலையில், அமித்ஷா ஹிந்தி மொழியை உயர்த்தி பேசி வருவதை, தமிழ்நாடு மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : ஓய்ந்தது சுபஸ்ரீயின் மரண ஓலம்... கிடைத்தது பேனருக்கு அனுமதி!

Intro:காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் ,
தமிழ் மொழி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி.Body:காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் ,
தமிழ் மொழி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

பேனர் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, பேனர் கலாச்சாரம் மீண்டும் வந்தால் சுபஸ்ரீ போன்ற மேலும் பலரை பலி கொடுக்கவேண்டிய நிலை உருவாகும் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசும் மாநில அரசும் மதித்து நடக்க வேண்டும், பாஜகவினர் அனைவரும் ஆர்எஸ்எஸ் வழியில் செயல்படுகிறார்கள், காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார், பாஜக ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது , 6 கோடி பேருக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கியவர் மோடி, பல கோடி மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள், இந்தியா பொருளாதார வளர்ச்சியில் காங்கிரஸ் காலத்தில் 9சதவீதம் இருந்தது தற்போது 4 சதவீதம் மட்டுமே உள்ளது, வரிக்குறைப்பு செய்தது பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது, ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மொழி ஒரே கலாசாரம் என்ற மோடியின் குறிக்கோள் எடுபடாது, தமிழ் மொழி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது, மோடி தமிழ்மொழி குறித்தும் , கலாச்சாரம் குறித்து பேசும் நிலையில் அமித்ஷா ஹிந்தி மொழியை உயர்த்தி பேசிவருகிறார் என்றார்.

பைட்-1 திரு.நாராயணசாமி - முதல்வர் புதுச்சேரிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.