ETV Bharat / state

'ஜக்கி வாசுதேவ் குறித்து இனி நோ கமெண்ட்ஸ்...’ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

author img

By

Published : May 19, 2021, 8:35 PM IST

Updated : May 19, 2021, 8:57 PM IST

ஜக்கி வாசுதேவ் குறித்து புதுத் தகவல்களோ, நிகழ்வுகளோ எழும்வரையிலும் அவர்குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வெளியிட்டுள்ள நான்கு பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ptr-palanivel-thiaga-rajan-statement-on-jaggi-vasudev
'ஜக்கி வாசுதேவ் குறித்து இனி கருத்து தெரிவிக்கமாட்டேன்'- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல பத்தாண்டு காலங்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். உலகின் மிக முக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றிற்கு நிர்வாக இயக்குநர், சர்வதேசத் தலைமை பொறுப்பையும் ஏற்று பணியாற்றியுள்ளேன். ஆனால், என் வாழ்நாள் பணி அனுபவத்தில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் அமைச்சர் எனும் பொறுப்பு.

முதலமைச்சர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலும், நான் பொது வாழ்க்கையில் ஈடுபட அவசியமாகவும், அது சாத்தியப்படவும் காரணமாக இருந்த என் முன்னோர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், என் திறன்கள் அனைத்தையும் பயன்படுத்தி என் கடமைகளை நிறைவேற்றி நிச்சயம் பாடுபடுவேன்.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகை, இணைய ஊடகம், தொலைக்காட்சி, வானொலி என 50க்கும் மேற்பட்ட ஊடக அழைப்புகள் வந்தன. என் நன்றிக்கு அடையாளமாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிப்படையான அரசு நிர்வாகம் எனும் தத்துவத்தின் அடிப்படையிலும் அவற்றுள் 12 அழைப்புகளை மட்டுமே நான் ஏற்றேன்.

ptr-palanivel-thiaga-rajan-statement-on-jaggi-vasudev
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

இந்த நேர்காணலின்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது, ஜக்கி வாசுதேவின் விதிமீறல்கள் ஆகிய இரண்டு தலைப்புகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன. இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது நான் பதில் அளித்து இருந்தாலும், இவை இரண்டும் என் அமைச்சகத்து சம்மந்தப்பட்டவை அல்ல என்பதையும், என் கவனம் இதுபோன்ற விஷயங்களில் சிதறுவதை இனி நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், துறைகளும் இவ்விஷயங்கள் மீது தக்க சமயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர் சக பணியாளன் மற்றும் குழுவில் ஓர் அங்கம் என்ற வகையில் தேவைப்படும்போது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க என் கருத்துகளையும், ஆதரவையும் நான் அளிப்பேன். வெளியிடப்பட வேண்டிய மிகமுக்கிய கருத்துகள் அனைத்தும் அண்மையில் நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். எனவே, இம்மாத இறுதிவரை ஊடகம் சார்ந்த சந்திப்புகள் அனைத்தையும் நிறுத்தி கரோனா தொடர்பான பணிகளில் என் முழு கவனத்தையும் செலுத்தவிரும்புகிறேன்.

கோயில்களுக்கு பல பங்களிப்பைச் செய்த எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கோயில்கள் அரசிடம்தான் இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கையில் எவ்வித பங்களிப்பும் செய்யாத போராளிகள் கோயில்களை தனியாரிடம் ஒப்படையுங்கள் என கூக்குரலிடுவது முரண்நகையாக இருக்கிறது.

ஜக்கி வாசுதேவ் என்பவர்...

2011-16ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது, ஜக்கி வாசுதேவின் கடந்த கால வரலாற்றில் பல விதிமீறல்கள், சட்டரீதியான முரண்பாடுகளுக்கான முகாந்திரம் இருப்பதை அறிந்தேன். ஆனாலும்கூட பொதுவாழ்வில் எனது பல்வேறு கடமைகளில் அந்தத் தணிக்கையில் உள்ளதை சரி செய்வது என்பது தலையாய பணி அல்ல.

பொதுத்தளங்களில் அறிக்கைகளாக இந்த மீறல்களின் அளவு மற்றும் நோக்கம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தாலும்கூட, உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு தனிப்பட்ட பொறுப்பு எதுவும் இல்லை. ஜக்கி வாசுதேவ், தனது அடுத்த விளம்பர யுக்தியாக கோயில்களை தனியார்மயமாக்குங்கள் என்று திரும்பும்போதுதான் அவரது நிலையை மட்டுமல்ல, அவரது உள்நோக்கம் மற்றும் பின்னணியையும் கேள்விக்குள்ளாக்கி நேர்காணல் கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல, எனது நோக்கம் அல்ல. நான் நிச்சயமாக தொடர்புடைய அனைத்து அலுவலர்களுடனும் பகிர்ந்து கொள்ளவுள்ள சான்றுகளின் அடிப்படையில், ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களையும் விதிகளையும் ஒவ்வொரு முறையும், தொடர்ச்சியாகவும் மீறியுள்ளார் என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும்.

எனினும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உல்ள சம்மந்தப்பட்ட துறைகளும், அது சார்ந்த அலுவலர்களும் எவ்வித இடையூறும் இன்றி இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். மேலும், இவரைக் குறித்து புதுத் தகவல்களோ, நிகழ்வுகளோ எழும்வரையிலும் இது குறித்து நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்!

Last Updated : May 19, 2021, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.