மதுரை காளவாசல் பகுதியில் தனியார் ஆயர்வேத சிகிச்சை, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவருவது தெரியவந்தது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விஜிலால், செலியன், அரசகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட ஏழு பெண்களும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் கோவையிலும் இதுபோன்ற சம்பவத்தில் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.