ETV Bharat / state

கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் - நீதிமன்றம்

மதுரை: கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில் அனைத்து துறைகளிலும் அமல்படுத்த தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Jun 25, 2019, 8:01 PM IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கடந்த 2001ஆம் பணியின் போது இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என அவரது மகள் பரணிசக்தி 2006ஆம் ஆண்டு கல்வித்துறையில் மனு அளித்தார். இதையடுத்து அவரது மனுவை கல்வித்துறை அலுவலர்கள் நிராகரித்தனர்.

இந்நிலையில் கல்வித்துறை அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிப்பதில் அலுவலர்கள் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் பறிபோகக்கூடாது. அரசு வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் போது ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வாகும் சூழல் ஏற்படும். இதனால் அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் திட்டமாக மட்டும் பார்க்காமல், அரசு ஊழியர் இறப்பால் உண்மையில் பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக பார்க்க வேண்டும்.

இதனால் தமிழ்நாட்டில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை தலைமை செயலர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில், கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் உருவாக்கி சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

Intro:தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஒத்த வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஒத்த வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கடந்த 2001-ல் பணியின் போது இறந்தார். இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி அரசிடம் 2006-ல் மனு அளித்தார்.

இவரது மனுவை நிராகரித்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் ,"
கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும்.

கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

அவர்களின் கனவு கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் பறிபோகக்கூடாது.
அரசு வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் போது ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வாகும் சூழல் ஏற்படும்.

இதனால் அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் திட்டமாக மட்டும் பார்க்காமல், அரசு ஊழியர் இறப்பால் உண்மையில் பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக பார்க்க வேண்டும்.

இதனால் தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை தலைமை செயலர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஒத்த வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் உருவாக்கி சுற்றறிக்கையை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்"
என உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.