மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையானது தென் மாவட்டங்களில் உள்ள மிக முக்கிய சந்தையாக கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூவின் விலை அடுத்த சில நாள்களில் பெரும் சரிவைக் கண்டு ஒரு கிலோ ரூபாய் 500க்கு விற்பனையானது.
இந்நிலையில் தொடர் முகூர்த்தம் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை இன்று காலை கிலோ ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சம்பங்கி- ரூ.120
செவ்வந்தி- ரூ.150
பட்டன்ரோஸ்- ரூ.150
பட் ரோஸ்- ரூ.100
அரளி- ரூ.120
பிச்சி- ரூ.600
முல்லை- ரூ.600
மெட்ராஸ் மல்லி- ரூ.500
கேந்தி- ரூ.70
கனகாம்பரம்- ரூ.1000 எனப் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
முகூர்த்த நாள் என்பதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!