ETV Bharat / state

ஈஷா யோகா மைய மகா சிவராத்திரியில் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - Meenakshi amman temple

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18, 19 ஆம் தேதிகளில் மதுரை, கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வர உள்ளார்.

Draupadi murmu isha yoga center maha shivaratri

author img

By

Published : Feb 9, 2023, 2:15 PM IST

Updated : Feb 9, 2023, 2:57 PM IST

மதுரை: கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு 11:50-க்கு வருகிறார். தொடர்ந்து 12:15 -க்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மீண்டும் 2:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் செல்கிறார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 3:20 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து விடுதியில் ஓய்வெடுத்து பின்னர் 5:45 மணிக்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் பங்கு பெறுகிறார். தொடர்ந்து 19ஆம் தேதி காலை 9:25 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதனால் மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: பிப்.14 இனி காதலர் தினம் இல்லையாம் 'COW HUG DAY' வாம்!

Last Updated : Feb 9, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.