கரோனா நோய்த் தொற்றின் காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகளுடன் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில் மதுபானக் கடைகளை திறப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மதுப் பிரியர்களுக்காக இரவு நேரங்களில் மதுக்கடை இல்லை என்பதால் மதுபானங்களை வாங்கி இரவு நேரங்களில் பலர் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கரடிகள் மற்றும் கூத்தியார்குண்டு பகுதியில் மது விற்பனை செய்வதற்காக கொண்டுச் சென்ற சர்குணம், வேல்ராஜ், ராஜேந்திரன் ஆகியோரை திருமங்கலம் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம், சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 450 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம், சிறிய சரக்கு வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.