ETV Bharat / state

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

மதுரை : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிணை மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
author img

By

Published : Aug 25, 2020, 3:04 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களது மகள் மாயமானது குறித்து பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கண்டுபிடித்து, இளைஞரைக் கைதுசெய்து, அந்தச் சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர்களிடம் மீட்கப்பட்ட சிறுமியை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது, விசாரணை செய்த அலுவலர்களுக்கு சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.அந்த வாக்குமூலத்தில், 2017ஆம் ஆண்டு முதல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட சில அதிமுக நிர்வாகிகள் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமி தரப்பில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளிக்கபட்டது. புகாரின் பேரில் விசாரித்த மகளிர் காவல் துறையினர் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த தகவலை அறிந்து தலைமறைவான நாஞ்சில் முருகேசனை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள கோயில் நிர்வாகி ஒருவர் வீட்டில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்," 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படாமல் தற்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் கொண்டு புனையப்பட்ட வழக்காகவே கருதப்பட வேண்டும். இந்த வழக்கில் பிணை கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிணை வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த மனுவானது, மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "குறிப்பிட்ட அந்த பெண் ஒரு இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவரை மீட்க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தான் உதவினார். மேலும், இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது எல்லாம் வழக்கு தொடுக்காமல் தற்போது திடீரென வழக்கு தொடுத்துள்ளது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது" என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்குரைஞர்," அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக பதிவு செய்து வழங்கி உள்ளார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பாரதிதாசன், பல ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் கூறப்பட்டுள்ளது என்ற மனுதாரரின் வாதம் ஏற்புடையதாக இல்லை. சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. தன் மகளின் வாழ்க்கையை , அவரது தாயாரே கெடுத்துள்ளார் என கருத்து தெரிவித்த மனுதாரரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

பிணை கோரிய மனுவை மனுதார ர் திரும்பப் பெறுகிறாரா அல்லது உத்தரவு பிறப்பிக்கலாமா?" என கேட்டார்.

இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக கூறியதை அடுத்து நீதிமன்றம் பிணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.