மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதில், மதுரை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உள்ள பேராசிரியர் சுதா, தங்கராஜ் , நாகரத்தினம் ஆகிய மூன்று பேரும் செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளவேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கபட்டது.
இதுகுறித்து, நீதிபதிகள் கூறும்போது ’’42 நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வந்த நிலையில், துணைவேந்தர் சிபாரிசின் அடிப்படையிலேயே மூன்று சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் விசாரணை நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என தெரிவித்தனர்
இதையும் படிங்க: 'டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்!' - ஸ்டாலின்