ETV Bharat / state

மாவோயிஸ்ட் மணிவாசகம் இறுதிச்சடங்கு வழக்கு: நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மதுரை: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரி ஆகியோருக்கு பரோல் கோரிய வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Parole for relatives to be taken up after maoist manivasagam body arrives
author img

By

Published : Nov 6, 2019, 6:25 PM IST

நாமக்கல் குமாரபாளையத்தில் செல்ல அன்பரசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார் என மாலை 6.30 மணிக்கு எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இறந்தவர் மணிவாசகம்தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல் துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காணத் தகுதியானவர்.

கேரள காவல் துறையினரால் மணிவாசகம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, அவரது சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆகவே மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா, அவரது சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். மேலும் அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கேரள நீதிமன்றம் மணிவாசகத்தின் உடலை வெள்ளிக்கிழமை வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: உயிரிழந்த மாவோயிஸ்ட் உடலை ஊரில் புதைக்க எதிர்ப்பு!

Intro:மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நாமக்கல் குமாரபாளையத்தில் செல்ல அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார், என மாலை 06.30 மணி அளவில் எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இறந்தவர் மணிவாசகம் தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல் துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காண தகுதியானவர். கேரள காவல்துறையினரால் மணிவாசகம் சித்திரவை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.  இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," கேரள நீதிமன்றம் மணிவாசகத்தின் உடலை வெள்ளிக்கிழமை வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.