மதுரை: சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (56) - குருவம்மாள் (54) தம்பதி வீட்டின் அருகே பலகாரக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் மாரி செல்வம் (25) தொழில்கல்வி படிப்பை பாதியிலேயே கைவிட்ட நிலையில் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
அதோடு குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி அடிக்கடி பணம் கேட்டு தாய் தந்தையரை தொந்தரவு செய்து வந்துள்ளதுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (ஜூலை 22) அளவுக்கதிமாக மது போதையில் வீட்டிற்கு வந்த மாரி செல்வம் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போதும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர், மாரி செல்வத்தின் கழுத்தை ஸ்கிப்பிங் கயிறை கொண்டு நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து தாங்களாகவே மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ், குருவம்மாள் இருவரையும் கைது செய்தனர்.