ETV Bharat / state

சாக்கடை அரசியல் செய்வோர் குறித்து பேச விரும்பவில்லை... நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - பிடிஆர்

பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்வோர் குறித்து பேச விரும்பவில்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

slipper issue  slipper thrown on ptr car  ptr about slipper issue  ptr about bjp  tamil nadu finance minister  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  காலணி சம்பவம் குறித்து பேசிய பிடிஆர்  பிடிஆர்  பாஜக குறித்து பேசிய பிடிஆர்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Aug 14, 2022, 8:15 AM IST

மதுரை: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மேயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் புறப்பட்டபோது, விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அவரின் கார் மீது பாஜகவினர் காலணியை எறிந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து பிறகு பேசுகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது… துரைமுருகன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.