ETV Bharat / state

மதுரை தமிழன்னை சிலையில் இந்துத்துவா திணிப்பு - பெ.மணியரசன் குற்றச்சாட்டு

மதுரை: தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறுவப்படவுள்ள தமிழன்னை சிலையில் தமிழர்களின் மரபை மறைக்க உள்ளதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

tamil
author img

By

Published : May 31, 2019, 10:22 AM IST

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர், மதுரையில் நிறுவப்பட்டுள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் 100 கோடி செலவில் தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

தற்போது தமிழன்னை சிலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் சிலை அமைக்கும் ஏலத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழன்னை சிலையானது தமிழர் மரபை மட்டும் ஒட்டி இருக்காது வர்ணாசிரம வேதகால மரபை ஒட்டி இருக்கும், அத்துடன் அயலார்களின் பண்பாட்டையும் இணைத்து ஒரு கலவை பெண் சிலையாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு, வெளிநாட்டு சிற்பிகளை கொண்டும் சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இது தமிழர் மரபை மறக்கக் கூடிய வகையிலும், மறைக்கக் கூடிய வகையிலும் உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் துணை போகின்றது. இதனைக் கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் கூடி "தமிழன்னை சிலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

செய்தியாளர்களை சந்தித்த பெ.மணியரசன்

தமிழன்னை சிலையை ஒரு வட நாட்டு பெண் சிலை ஆக மாற்றுவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புக் கொள்வதை கண்டித்து ஜுன் 17ஆம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் பல அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்டு தமிழன்னை சிலை ஒன்றை உருவாக்கி அவர்களிடம் கொடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
30.05.2019

*தமிழன்னை சிலையிலும் இந்துத்துவா திணிப்பு*

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைய உள்ள தமிழன்னை சிலையில் உள்ள சர்ச்சை குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர்
பெ.மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அஙபோது கூறுகையில், 
மதுரையில் நிறுவப்பட்டுள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் 100 கோடி செலவில் தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் கூறினார்.

இப்போது தமிழன்னை சிலை அமைப்பதற்கு தமிழக அரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் சிலை அமைப்பதற்கான ஏழாம் கேட்குமாறு விளம்பரம் கொடுத்துள்ளது. அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது தமிழன்னை சிலையானது தமிழர் மரபை மட்டும் ஒட்டி இருக்காது வர்ணாசிரம வேதகால மரபை ஒட்டி இருக்கும், அத்துடன் அயலார்களின் பண்பாட்டையும் இணைத்து ஒரு கலவை பெண் சிலையாகவும்,  வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு, வெளிநாட்டு சிற்பிகளை கொண்டும் சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இது, தமிழர் மரபை மறக்கக் கூடிய வகையிலும், மறைக்கக் கூடிய வகையிலும் ஆக்ரமிப்பு நடவடிக்கையாக இந்த தமிழன்னை சிலை வைக்கப்பட உள்ளது.

 இதற்கு தமிழக அரசும் துணை போகின்றது இதனை கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் கூடி "தமிழன்னை சிலை எதிர்ப்பு கூட்டமைப்பை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம் ".

சொந்த இனத்திற்கு தமிழ்க ஆட்சியாளர்கள் துரோகம் விளைவிக்கின்றனர். தமிழன்னை சிலையை ஒரு வட நாட்டு பெண் சிலை ஆக மாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் அமைச்சரவை ஒப்புக் கொள்வதை கண்டித்து 17.06.2019 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

நாங்கள் பல அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை கொண்டு தமிழன்னை சிலை ஒன்றை உருவாக்கி அவர்களிடம் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_30_STATUE OF TAMILANNAI ISSUE_TN10003
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.