தென்மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, வட மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில், 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் நேற்று (மே 27) மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.
இதற்காக, டேங்கர் லாரிகளை ரயிலின் பிளாட் வேகன்களிலிருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வந்த 24 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.
இதையும் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டிற்கு ரயில் மூலம் 1393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.