குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்காக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையினரை கண்டித்தும் மதுரையில் சமூகநீதி மாணவர்கள் இயக்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட சமூகநீதி மாணவர்கள் இயக்கத்தினரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
இதற்கு முன்னதாக அவர்கள் பாண்டி பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இஸ்லாமியர்கள், இலங்கை தமிழருக்கு எதிரான இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை, சாலை சீரமைப்பு வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!