ETV Bharat / state

நான் தனி ஆள் கிடையாது: ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பேட்டி! - மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்

மதுரை: நான் என்னை தனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக எண்ணவில்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பலம் நிறைந்த ஒருவனாகவே கருதுகிறேன் என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
author img

By

Published : Aug 20, 2019, 1:05 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அதிமுக தலைமையின் முடிவுதான் இறுதியானது. முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி அனைத்து இஸ்லாமிய பெண்களும் சமம் என்ற நோக்கத்தில் நிறைவேற்றியுள்ளார். அதனால் தனிப்பட்ட முறையில் நான் அதனை ஆதரிக்கிறேன் என்றார்.

ஓ.பி.ரவீந்திரநாத் குமார் செய்தியாளர் சந்திப்பு

மேலும் அவர், என்னைப் பொறுத்தவரையில் நான் தனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என நினைக்கவில்லை. ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பலம் நிறைந்த ஒருவனாகவே கருதுகிறேன். அடுத்தகட்ட பதவி குறித்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. தலைமை கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முயன்று வருகிறேன் எனத் தெரிவித்தார்.

Intro:தனிப்பட்ட முறையிலேயே முத்தலாக் சட்டத்தை நான் ஆதரித்தேன் - ரவீந்திரநாத் குமார் MP பேட்டி

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையிலேயே நான் ஆதரித்தேன் என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் op ravindranath kumar மதுரை விமான நிலையத்தில் பேட்டி
Body:தனிப்பட்ட முறையிலேயே முத்தலாக் சட்டத்தை நான் ஆதரித்தேன் - ரவீந்திரநாத் குமார் MP பேட்டி

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையிலேயே நான் ஆதரித்தேன் என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் op ravindranath kumar மதுரை விமான நிலையத்தில் பேட்டி

மதுரை விமான நிலையத்திற்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் OP ரவீந்தரநாத் குமாரிடம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது என்ற கேள்விக்கு 'பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய தலைமையிளான மத்திய அரசு அமைத்த முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு இன்று தேனி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக வருகை தந்துள்ளேன்.

அமைச்சரவையில் இடம், போன்றவற்றை யோசித்தது கூட கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முடிவுதான் இறுதியானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தலாக் சட்டத்தை பொருத்தவரை பிரதமர் அனைத்து பெண்களும் சமம் என்ற உரிமைக்காக சட்டத்தை கொண்டு வந்துள்ளார். நான் தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன் என்றார்

மத்திய அரசு மொழி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு. தமிழக முதல்வர் மொழிக் கொள்கை குறித்து தெளிவான முடிவை அறிவித்துள்ளார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இருந்து எந்த நிலைபாடு இருந்து வந்ததோ அதன்படியே தற்போதும் செயல்பட்டு வருகின்றனர் என்றார்

அரசு அதிகாரிகள் மக்களின் குறையை தீர்க்காதபட்சத்தில் சட்ட ஒழுங்கு தளர்த்தப்பட்டு மக்கள், அரசு அதிகாரிகளை தாக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறிய கேள்விக்கு*

இது குறித்து விவரம் தெரியவில்லை. தெரிய வந்தபின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன் என்றார்

மேலும் பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் விரிவான அறிக்கையை தெரிவித்துள்ளார். எனவே அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

நாளுக்கு நாள் ஏற்படும் விலை உயர்வின் கட்டாயத்தினால் அனைத்து மக்களின் கருத்தும் கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்

தனித்த அதிமுக எம்பி யாக இருப்பது குறித்த கேள்விக்கு, என்னை பொறுத்த வரையில் தனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக எண்ணவில்லை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பலம் நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமர் அவர்களின் கொள்கைக்கு குறித்த கேள்விக்கு, பிரதமரின் நிலைப்பாடாக உள்ளது. தமிழக முதல்வர் மற்றும் துணை முதலவர் அவர்களின் நிலைப்பாடுகளை அறிவிப்பார்கள்.

தேனி பாராளுமன்ற உறுப்பினராக முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளேன். மேலும் எனக்கு உண்டான வாய்ப்பை பயன்படுத்தி உள்ளேன். கிடைக்கப்பெற்ற வாய்ப்பினையும், தேனி பாராளுமன்றத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை பாராளுமன்றத்தில் பிரதிபலித்தும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன். தொடர்ந்து தமிழகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி தனிப்பெரும் தொகுதியாக மாற்றுவேன்.

அடுத்த கட்ட தலைவர் மற்றும் தலைமை போன்றவற்றிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தற்போது எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வேன்.

பாராளுமன்றத்தில் பாஜக மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் நண்பர்களாகவே பழகி வருகின்றனர். எதிர் வரும் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என்று திமுகவினர் கேள்வி எழுப்பும்போது எதிர்வாதமாக எந்த சட்டத்தின் அடிப்படையில் கச்சத்தீவை வழங்கினார்கள் என்று வாதம் எழுப்பினேன் என்றார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.