மதுரை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் காப்பகம் இயங்கிவருகிறது. இதில் ஆதரவற்ற முதியோர்களும் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இங்கு இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் (45) ஒருவர் கர்ப்பமானதை அடுத்து அதிர்ச்சி அடைந்த காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் 67 வயது முதியவர்தான் பெண்ணை கர்ப்பாக்கினார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் பெண்ணை கவனித்துக் கொள்வதாகக் கூறி, யாரும் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து முதியவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காப்பக நிர்வாகிகள் 10 பேரிடமும், காப்பக ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது