மதுரையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அங்குள்ள உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலை அருகே உள்ள திடலில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலமாகப் பயங்கரவாத தடுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.
அப்போது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகின்றபோது மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்தும், பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினர்.
150-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில், மதுரை விமான நிலையத்தில் இக்குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க: அரசியல் பிரச்னைகளால் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நகரும் அமர ராஜா