ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 2 மாணவர்களுக்கு ஜாமின்!

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியும் அவர்கள் தந்தைகளின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 30, 2019, 2:44 PM IST

Updated : Oct 30, 2019, 4:46 PM IST

neet

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாகக் கைதான சென்னை மாணவர் உதித்சூர்யா அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நீண்டது. இதில் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், நான்கு பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

அவற்றை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாணவர்கள் ராகுல் டேவிஸ், பிரவீன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘ஒவ்வொரு முறையும் உயிர்பலி வேண்டுமா?’ - அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Intro:நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியும் அவர்களின் தந்தைகளின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியும் அவர்களின் தந்தைகளின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்," 2016ல் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில், சென்னை பிரீஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தேன்.  பின்னர் மருத்துவக்கல்வி நடத்த பிரிஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன். அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்தி பயின்று வருகிறேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்விதமான ஆதாரமும் இன்றி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கனவே கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. ஆகவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதே போல் சென்னையைச் சேர்ந்த டேவிஸ் அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில்," நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், எனக்கு பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வெழுதியதாகவும் அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் கூறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புரோக்கர் வேதாச்சலம், ரசித் பாய் தொடர்பாக விசாரித்து அவர்களைக் கைது செய்யாமல், எங்களைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே, எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கில்
மாணவர்கள் ராகுல் டேவிஸ், பிரவீன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் ஆகியோருக்கு ஜாமின் வழங்க நீதிபதி G.R. சுவாமிநாதன் மறுத்தும் உத்தரவு .Conclusion:
Last Updated : Oct 30, 2019, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.