ETV Bharat / state

ஸ்டேன் சுவாமி மரணம் திட்டமிட்ட அரச படுகொலை.. நாட்டைக் காப்போம் அமைப்பு குற்றச்சாட்டு.. - ஸ்டான் சாமி கொலையா

ஸ்டேன் சுவாமியின் மரணம் திட்டமிட்ட அரசு படுகொலை, நிபுணர் குழு அமைத்து விசாரணை தேவை என நாட்டைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டான் சாமி மரணம் திட்டமிட்ட அரச படுகொலை

author img

By

Published : Dec 17, 2022, 8:00 AM IST

மதுரை: இதுகுறித்து நாட்டை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான சி.ஜே.ராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமியின் மடிக்கணினியில் போலியான 44 ஆவணங்கள் திணிக்கப்பட்டிருந்தன என்று அமெரிக்க ’ஆர்சினல் கன்சல்டிங்’ தடயவியல் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கில், 2018ஆம் ஆண்டு ஸ்டேன் சுவாமி, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவரராவ், சுதாபரத்வாஜ், கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் சிறையில் உள்ளனர். இதற்கிடையில் மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி, பார்க்கின்சன் என்னும் பக்கவாத நோயால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையிலும், அவருக்கான அடிப்படை உரிமையை வழங்க நீதிமன்றம் மறுத்தது.

திரவ உணவை உறிஞ்சி குடிப்பதற்காக, உறிஞ்சி குழல் மற்றும் உறிஞ்சி குவளை கூட சிறை நிர்வாகத்தால் அவருக்கு வழங்கப்படவில்லை. மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. மனித உரிமை ஆணையம், மும்பை உயர் நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே மிக தாமதமாக தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி சேர்க்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2021ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இது இயற்கையான மரணம் அல்ல. நிறுவன கொலை என்று விமர்சனங்கள் எழுந்தன. ஐக்கிய நாட்டு அவையும் தனது கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் ஸ்டேன் சுவாமி மடிக்கணினி ஆய்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில் மாவோயிஸ்ட்களால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனமான ஆர்செனல் கன்சல்டிங் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் ரோனாவில்சன் கணினியில் இது போன்ற ஆவணங்கள் உட் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான தொழில்நுட்பம் மற்றும் நச்சு மென்பொருள் மூலம் வஞ்சகமாக கணினிகளில் தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று பீமாகொரேகான் கைதுகள் நடந்துள்ளன. நாளை இந்த ஆட்சியை விமர்சிக்கும் எவரும் இது போன்ற கொடூரமான செயலுக்கு இலக்காகலாம். பீமாகொரேகான் வழக்குகளில் கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணை அல்லது விடுதலையை என்ஐஏ எதிர்க்க கூடாது. இவர்களின் கணினிகளில் எப்படி ஆபத்தான தகவல்கள் திணிக்கப்பட்டன என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைத்து முழுமையாக ஆய்வு செய்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் அறிக்கை வெளியிட வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு நடந்த சம்பவங்களுக்கு பகிர்ந்த மன்னிப்பு கேட்க வேண்டும், ஸ்டேன் சுவாமிக்கு எதிரான விசாரணையை தொடங்கி நீதிமன்றம் அவரை நிரபராதி என்று அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணகி கோயில் விவகாரம்: ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப்பின் முரணாக கருத்து...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.