ETV Bharat / state

குரங்குகள் உயிரிழப்பு; குழு அமைத்து வனத்துறையினர் ஆய்வு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் குரங்குகள் உயிரிழந்து வருவதால் வனத்துறையினர் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

குழு அமைத்து வனத்துறையினர் ஆய்வு
குழு அமைத்து வனத்துறையினர் ஆய்வு
author img

By

Published : Apr 25, 2020, 12:16 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பிள்ளையார் கோயில், தர்ஹா உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் அங்கு வருகின்றவர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி வந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வருகையின்றி குரங்குகள் உணவிற்காக தவித்துவந்தன. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் குரங்குகள் தொடர்ந்து உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதனால் குரங்குகளின் உணவுக்காக திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர், தன்னார்வலர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.

குழு அமைத்து வனத்துறையினர் ஆய்வு

அப்படி உணவிற்கு ஏற்பாடு செய்தும் மேலும் இரண்டு குரங்குகள் உயிரிழந்தன. அதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் குரங்குகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதையடுத்து வனத்துறை சார்பாக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து குரங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கண்காணிப்பு தொடங்கியது.

திருப்பரங்குன்றம் பகுதியில் நான்கு அணியாக குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு அணி குரங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் குரங்குகள் உயிரிழந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுகுறித்து வனத்துறையினர், குரங்குகளின் உடற்கூறாய்வின் முடிவில்தான் குரங்குகள் உயிரிழந்தற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உணவில்லாமல் அவதி: குரங்குகளின் பசியை போக்கிய காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.