ETV Bharat / state

புத்துயிர் பெறும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் - நவீனமயமாக்கும் பணிகள் தீவிரம்! - ராமேஸ்வரம்

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரம் நகராட்சியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்காக பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் நவீனமாக அமைய உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 12, 2023, 11:49 AM IST

மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சூழல் அமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையத்தைப் போன்ற வசதிகளை வழங்குவதற்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 2022இல் மறுசீரமைப்பு பணிக்கான டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளில் நடந்து முடிந்தது மற்றும் நடக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
• சுமைப்பணியாளர்கள் (கூலி போர்ட்டர்) அறையை அகற்றி பொருட்களை இடமாற்றம் செய்தல் நிறைவு.
• கட்டு சிப்பம் (பார்சல்) அலுவலக பகுதி நிலா அளவை கணக்கெடுப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணி முடிவு.
• கிழக்கு முனைய கட்டிடத்திலிருந்து பொருட்களை இடமாற்றம் பணி முடிவு.
• கட்டுமானப்பணிக்கான தொகுப்பு ஆலை நிறுவல் முடிந்தது.

நடைபெற்று வரும் மற்ற பணிகள்
• திட்ட மேலாண்மை அலுவலகம் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
• கிழக்கு முனையக் கட்டிடத்தின் ஒரு பகுதியாக தடுப்புகள் அமைத்தல், அகற்றுதல் மற்றும் இடமாற்றம் பணிகள்
• தற்போதுள்ள காத்திருப்பு கூடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள்
• நில அளவை மற்றும் நிலப்பரப்பு ஆய்வு, மண் ஆய்வு, போக்குவரத்து ஆய்வு, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த திட்ட சரிபார்ப்பு போன்ற பூர்வாங்க பணிகள் நிறைவடைந்தன.

• தற்போதுள்ள காத்திருப்பு கூட கட்டிடம், தற்போதுள்ள பன்னோக்கு கட்டிடம், பார்சல் அலுவலகம் மற்றும் துணை மின்நிலையம், குடியிருப்புகள், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நடைமேடை கூடாரப் பணிகள், நடைமேடை மற்றும் பிற வேலைகள், கிழக்கு முனைய கட்டிடம் மற்றும் பாதசாரிகள் மற்றும் புறப்படும் முன்பகுதியின் கட்டுமானம் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு ஒப்பந்தக்காரருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

• பொருட்கள் தர சோதனை முடிந்தது.

• திட்டத்தின் பங்குதாரர்களுடன் தொடர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி கோயம்புத்தூரில் உள்ள சபரி யூஆர்சி ஜேவி நிறுவனத்திற்கு 90 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முடிக்க 18 மாத கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்ட மேலாண்மை பணிகள் மும்பையை சேர்ந்த டியுவி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 4 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு முனையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையக் கட்டிடம் 6 மாடியில் அமைய உள்ளது. காத்திருப்பு கூடம், பயணச்சீட்டு பகுதி, வணிகப் பகுதி, ரயில்வே அலுவலகங்கள் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரித்தல், மற்றும் போதுமான மின் தூக்கிகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் இந்தக் கட்டிடத்தில் அமையவுள்ளன. வடக்கு முனைய கட்டிடத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி வசதி, ரயில்வே அலுவலகங்கள் மற்றும் பல்வேறு உதவி மையங்கள் அமைய உள்ளன. மேலும் தனி வழித்தடத்துடன் வாகன பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்": அவதூறு பேசிய இளைஞரின் வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.