ETV Bharat / state

அத்தியாவசிய பொருள்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருள்களின் கையிருப்புப் போதுமான அளவிற்கு உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தில்
விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தில்
author img

By

Published : Apr 24, 2020, 3:48 PM IST

மதுரை கப்பலூரில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் உள்ள திறந்தவெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை ஆய்வுசெய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "கரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பணிகள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது.

அதனடிப்படையில் மதுரையில் உள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த 87 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

வாடிப்பட்டியில் 7 நிலையங்கள், அலங்காநல்லூரில் 6 நிலையங்கள், மதுரை கிழக்கு 5 நிலையங்கள் உள்ளிட்ட 87 நெல் கொள்முதல் நிலையங்களில் ஏழாயிரத்து 596 விவசாயிகள் நான்காயிரத்து 629 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.

இதற்காக 90 கோடி ரூபாய்க்கு மேல் ஈசிஎஸ் மூலம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விவசாயிகளிடமிருந்து விலைபொருள் உற்பத்திசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் தேவையான அளவில் சாக்குப் பைகள், எடைபோடும் இயந்திரங்கள் போன்ற அனைத்து உபகரணங்களும் அசாதாரண சூழ்நிலையிலும் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவித்தார்.

விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயகுமார்

மேலும், இங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டுவருகிறது. அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான போதுமான கையிருப்பு உள்ளது என்றார்.

இதையும் பார்க்க: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்ப ஒப்படைத்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.