ETV Bharat / state

ஓராண்டிற்குள் வைகை எழில்மிகு ஆறாக மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: அடுத்த ஓராண்டிற்குள் வைகை எழில்மிகு ஆறாக மாறும், அதற்குரிய பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

vaikai river
vaikai river
author img

By

Published : Nov 28, 2020, 6:53 PM IST

மதுரை வைகையாற்றில் திடீரென பெருகிய வெள்ளநீரின் காரணமாக ஆகாயத்தாமரையுடன் நுரை பொங்க காட்சி அளித்தது. ஆகையால் ஜேசிபி மூலம் அதனை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அணையில் தண்ணீர் திறக்காமலேயே வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றிரவு (நவ. 27) பெய்த கனமழை காரணமாக ஆற்றில் அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள் தற்போது அகற்றப்பட்டுவருகின்றன. 245 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை நன்னீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அடுத்த எட்டு மாதங்களில் கழிவுநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது தண்ணீருடன் கழிவுநீரும் சேர்ந்து வருகின்ற காரணத்தால் நுரைபெருகி காணப்படுகிறது. வேறு ரசாயனங்கள் எதுவும் கலக்கவில்லை. எனவே இதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம். வைகையாற்றின் குறுக்கே ஆரப்பாளையம் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும். அடுத்த ஓராண்டிற்குள் வைகை எழில்மிகு ஆறாக மாற்றப்படும்" என்றார்.

வைகை ஆற்றை ஆய்வுசெய்த அமைச்சர்

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.