மதுரை மாவட்டம், கீழமாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி, நிழற்குடை, சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலின்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆட்சியை கலைப்பதிலேயே மு.க.ஸ்டாலின் குறியாக இருந்தார். 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், சிறு குறு பயிர் கடன் தள்ளுபடி செய்வேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்ததார். அதன்படி, 31 மார்ச் 2016 ஆம் ஆண்டு ஐந்தாயிரத்து 372 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம்.
அதிமுக குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசி வருகிறார். எதையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு அவர் பேச வேண்டும். இதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது துறை ரீதியான சந்திப்பாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
திமுக டெல்லி பயணம்
இலங்கை தமிழர் பிரச்னை குறித்து டெல்லியில் திமுகவினர் குரல் கொடுத்தனரா? திமுகவினர் பதவிக்காக மட்டும்தான் அடிக்கடி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பார்கள். நமது முதலமைச்சர் அப்படியல்ல, துறை ரீதியான விஷயத்திற்கு மட்டுமே செல்வார்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம். அதே போல், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டீல் மருத்துவ மாணவ, மாணவியரை உருவாக்கி முன்னோடி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம்.
கடந்த 10 ஆண்டுகளாக நான் சட்டப்பேரவை உறுப்பினராக கடமையை செய்துள்ளேன். அதனால்தான் இன்று இங்கு மக்களை சந்திக்க முடிகிறது இல்லை என்றால் மக்களை சந்திக்க முடியுமா" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் செல்லூர் ராஜு