அப்போது பேசிய அவர், “வைகை அணையிலிருந்து 2020 - 2021ஆம் ஆண்டிற்கான பெரியார் பாசன பகுதியில் ஒரு போக பாசனத்திற்கு சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு 1130 கன அடி தண்ணீர் இன்று (செப் 27) முதல் 120 நாள்கள் திறக்கப்பட்டன.
மேலும், ஒரு போக விவசாயிகள் சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பெரியாறு பாசன கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும். மதுரையிலும் அது விரைவில் தொடங்கிவைக்கப்படும்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரில் சென்று வழங்குகிறோம். 3000 நகரும் ரேஷன் கடைகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகர மக்கள் முதல், கிராமங்கள்வரை நகரும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
மேலும் சிலைகளை பாதுகாப்பதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டுவருகிறது. சிலைகளை அவமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமில்லை. மத்திய அரசுதான் காரணம். தமிழ்நாட்டில் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டுறவு துறை மூலம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. அரசு நினைத்தால் எதையும் சாதித்து காட்ட முடியும். மக்களின் பிரச்னைகளை நிறைவேற்ற முடியும்” என்றார்.
இதனையடுத்து, சிறையிலிருந்து வெளிவர இருக்கும் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர் மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: போலி இணையதளம் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி : மூன்று பேர் கைது